பதவியேற்பு விழாவில் பல மாதங்களுக்கு பிறகு கைகுலுக்கி பேசும் கென்யா அதிபர்கள்..மகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..! - Seithipunal
Seithipunal


கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள குடியரசு நாடான கென்யாவில் அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ரெய்லா ஒடிங்காவை விட மிகக்குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வில்லியம் ரூட்டோ இன்று கென்யாவின் 5வது அதிபரக பதவியேற்றார். 

இந்த தேர்தல் வெற்றி செல்லாது என அதிகாரப்பூர்வ முடிவுகளுக்கு எதிரான வழக்குகளை விசாரித்ததில் கென்யா உயர்நீதிமன்றம் அந்த மனுக்களை கடந்த வாரம் நிராகரித்தது. 

கென்யாவின் அதிபராக இருந்து பதவி விலகும் உஹுரு மற்றும் துணை அதிபராக வில்லியம் ரூட்டோ இருந்தார். இந்நிலையில் இருவருக்குமிடையே எழுந்த மனக் கசப்பால் ஒருவருக்கொருவர் மாதக் கணக்கில் பேசாமல் இருந்தனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இருவரும் கைகுலுக்கி பேசிக் கொண்டது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை எற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5th President of Kenya sworn today.


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->