காசா போலியோ முகாமில் குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்!...இஸ்ரேலுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம்!
6 people including children injured in gaza polio camp world health organization condemns israel
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த போர் தொடங்கி ஓராண்டினை நிறைவு செய்துள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை தாக்கி வந்தனர். இந்த சூழ்நிலையில் பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் இஸ்ரேல் பதில் தாக்குல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, போலியோ சொட்டு மருந்து முகாமிற்காக போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான ஒப்புதலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் 4 குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த சமீபத்திய தாக்குதல் குழந்தைகளுக்கு சுகாதார பாதுகாப்பு அளிப்பதற்கான புனித தன்மைக்கு தீங்கு ஏற்படுத்துவது என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
English Summary
6 people including children injured in gaza polio camp world health organization condemns israel