மது அருந்துவதால் 7 வகையான புற்றுநோய்கள் தாக்க அதிக வாய்ப்பு.. உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை.!
7 cancer disease affected to drinking liquor
மது அருந்துவதால் 7 வகையான புற்றுநோய்கள் வருவதற்கு மிக அதிக வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெற்ற மருத்துவ ஆய்வுகளின் மூலம் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் உலக நாடுகளில் மது அருந்தும் பழக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார நிறுவனம் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சமீப சில நாட்களாக மது அருந்துதல் ஒரு சாதாரண பழக்கம் என்றும் அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கூறிக் கொண்டு மது அருந்தி வருகின்றனர். இந்த தவறான தகவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் மது அருந்துவது குறித்து ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் உடலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் மது அருந்தலாம், குறைவான அளவு மது அருந்துவதால் உடலுக்கு பாதிப்பு ஏற்படாது போன்றவை போலியான தகவல்களாகும்.
ஆனால், மது அருந்துவது மிக மிக ஆபத்தானது என்பதுதான் மருத்துவ உண்மை. மேலும் மது அருந்துவதால் 7 வகையான புற்று நோய்கள் தாக்க மிக அதிக வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
English Summary
7 cancer disease affected to drinking liquor