20 பேருடன் சென்ற பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது! - Seithipunal
Seithipunal


வியட்நாமில் கனமழையை தொடர்ந்து புயல் ஏற்பட்ட காரணத்தால் ஒரு பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. ஒரு பேருந்தும் இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

வியட்நாமில் கடந்த சனிக்கிழமை தாக்கிய யாகி என்ற சூறாவளி புயலுக்கு பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளபெருக்கு மற்றும் நிலச்சரிவின் போது 50 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில் காவ் பாங் மாகாணத்தில் 20 பேருடன் சென்ற பயணிகள் கொண்ட பேருந்து வெள்ளத்தால் ஓடையில் அடித்துச் செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து, தகவல் அறிந்த நிலையில் மீட்புப் படையினர் குவிக்கப்பட்டனர், ஆனால் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

அதுபோல புதோ மாகாணத்தில் ஆற்றின் மீது உள்ள இரும்புப் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. 2 மோட்டார் வாகனங்கள், 10 கார்கள் மற்றும் டிரக்குகள் ஆற்றில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதில், 3 பேரை ஆற்றில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் 13 பேர் காணவில்லை என கூறுகின்றனர். மேலும், கடந்த வாரம் பிலிப்பைன்சில் 20 உயிர் இழப்புகளையும், தெற்கு சீனாவில் 4 பேரையும் இந்த யாகி சூறாவளி புயல் பலிவாங்கியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A bus carrying 20 people was swept away by the flood


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->