எஜமானரை காப்பாற்ற விஷப்பாம்புடன் போராடிய நாய்.! வியக்கவைக்கும் சம்பவம்.!
a pet dog saved his care taker from a black mamba
நம் அனைவரும் வீட்டில் செல்லப் பிராணிகளாக நாய், பூனை, முயல், அணில், கிளி, புறா போன்றவற்றை வளர்ப்போம். அதிலும் குறிப்பாக நாய்கள் நமக்குச் செல்லப் பிராணிகளாக இருப்பதோடு காவலாளியாகவும் செயல்படும். சில நேரங்களில் நாய்கள் அதன் உரிமையாளரை ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றி இருக்கிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் ஆஃப்பிரிக்கா நாட்டில் நடைபெற்றுள்ளது.
ஆப்பிரிக்காவின் குயின்ஸ் பர்கில் உள்ள எஸ்காம்பில் நகரைச் சார்ந்த ஒரு நபர் தனது செல்லப் பிராணியாக ராட்வீலர் நாய் ஒன்றை வளர்த்து வந்திருக்கிறார். இந்த நாய் தான் அவரை மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறது. தற்போது, இந்த நாயின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நாய் தனது உரிமையாளரின் படுக்கையின் அடியில் கொடிய வகை பிளாக் மாம்பா பாம்பு இருப்பதை உணர்ந்து அவரைப் படுக்கையிலிருந்து தள்ளிவிட்டு இருக்கிறது. மேலும், அவரது படுக்கையின் அடியிலேயே பார்த்து குறைத்துக் கொண்டே இருந்திருக்கிறது. இதனை கவனித்த அதன் உரிமையாளர் படுக்கையின் அருகில் சோதனை செய்து பார்த்தபோது கொடிய பிளாக் மாம்பா இருப்பதை அறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, தனது செல்லப் பிராணியை அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்த அவர் பாம்பு பிடிக்கும் நபர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அவர்கள் வந்து பிளாக் மாம்பாவை பிடித்துச் சென்றனர். தற்போது தனது எஜமானரின் உயிரை காப்பாற்றிய ராட்வீலர் நாயின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
English Summary
a pet dog saved his care taker from a black mamba