உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!...பதவியேற்ற 6வது நாளில் மேயர் தலை துண்டித்து படுகொலை!...அரசு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மீது குறிவைத்து தாக்குதல்!
A shocking incident on the 6th day after taking office the mayor was beheaded and killed targeted attacks on government officials and journalists
சமீபத்தில் தென்மேற்கு மெக்சிகோவில் உள்ள குவேரோ மாகாணத்தில் மேயர் தேர்தல் நடைபெற்றது. குவேரோ மாகாணத்தில் உள்ள சில்பான்சிங்கோ நகருக்கு நடைபெற்ற இந்த மேயர் தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டது. தொடர்ந்து இந்த தேர்தலில் அலெஜான்ட்ரொ ஆர்காஸ் என்பவர் வெற்றி பெற்று மேயராக பதவியேற்றார்.
இந்நிலையில், மேயராக பதவியேற்ற அலெஜான்ட்ரொ ஆர்காஸ் 6 நாட்களில் அலெஜான்ட்ரொ ஆர்காஸ் படுகொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் அவருக்கு வேறு யாருடனாவது முன்பகை இருக்கிறதா அல்லது பாதுகாப்பது காரணமின்மையால் படுகொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே சமீப காலமாக குவேரா மாகாணத்தில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், குறிப்பாக அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது குறிவைத்து தாக்குதல்கள் நடத்துவதும், இந்த தாக்குதலில் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
A shocking incident on the 6th day after taking office the mayor was beheaded and killed targeted attacks on government officials and journalists