கொரோனோவால் '2' வருடங்களாக பரிதவித்த பெண்! முதல் முறை காஃபி... ஆனந்த கண்ணீர் மொமென்ட்.! - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வந்தது. இந்தத் தொற்றினால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான மக்கள் இந்த நோய் தொற்றினால்  பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தனர்.

கொரோனா தொற்றைப் பொறுத்தவரை அதன் அறிகுறிகள் மற்றும் தாக்கம் 7நாட்களில் முதல் 14 நாட்கள் வரை  இருக்கும், ஆனால் அரிதாக ஒரு சிலருக்கு அந்த நோயின் தாக்கம் இரண்டு வருடங்களுக்கு மேல்  இருந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அமெரிக்காவைச் சார்ந்த ஒரு பெண்மணிக்கு தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்காவைச் சார்ந்த ஜெனிபர் ஹெண்டர்சன் என்ற 54 வயதான பெண்மணி கடந்த 2021 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தலைவலி  உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் 14 நாட்களுக்குள் சரியாகி விட்டாலும் சுவை மற்றும் வாசனை நுகர்வுத் திறன் அவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார். இதன் காரணமாக தனக்கு பிடித்த உணவுகளை கூட வெறுத்து ஒதுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருந்திருக்கிறார் அந்த பெண்மணி.

இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஸ்டெலெட் கேங்லியன் பிளாக் என்ற சிகிச்சையின் மூலம் அவர் இழந்த சுவை மற்றும் நுகர்வு உணர்வு அவருக்கு திரும்ப கிடைத்து இருக்கிறது. இந்த சிகிச்சை என்பது கழுத்தின் இருபுறமும் உள்ள நரம்புகளில் மயக்க மருந்து செலுத்தி அளிக்கப்படும் சிகிச்சை ஆகும். இதன் பயனாக அவர் இழந்த உணர்வுகளை படிப்படியாக திரும்பப் பெற்று இருக்கிறார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் காபியை நுகர்ந்து அதன் வாசனையை உணரும் போது விடும் ஆனந்த கண்ணீர் பார்ப்போர்களை நெகிழச் செய்யும் வகையில் இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A woman who has been affected by Corona for a long time now smells coffee after two years


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->