ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 4.5 ரிக்டர் பதிவு!
Afghanistan Earthquake
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 9:58 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி இருப்பதாகவும், பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தும் பொருட்சேதம் குறித்தும் எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.