பாகிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு.! ஏராளமானோர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


நமது அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் குவெட்டா நகரில் உள்ள காவல் தலைமையகம் அருகே பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்று உள்ளது. இந்த சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் பெஷாவரில் நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சுமார் 150-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 

தற்போது, நடைபெற்ற இந்தக் குண்டு வெடிப்பு காவலர் குடியிருப்பு அருகே நிகழ்ந்ததால், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் போலீசார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

again bomb explosion in pakisthan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->