சான் பிரான்சிஸ்கோ - மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து - காரணம் என்ன?
air india flight cancelled san fransisco to mumbai
சான் பிரான்சிஸ்கோ - மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து - காரணம் என்ன?
அமெரிக்கா நாட்டில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் இருந்து இந்தியவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பைக்கு வர கூடிய ஏர் இந்தியாவின் போயிங் 777 ரக விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பயணிகளுக்கு மாற்று விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யவோ அல்லது கட்டண தொகையை திருப்பி தரவோ தயார் என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாவது:- "மேற்கூறிய சலுகை தவிர, பயணிகள் ஓட்டலில் தங்குவதுடன் மாற்று விமானம் ஏறும் வரையிலான அனைத்து போக்குவரத்து செலவுகளையும் நாங்கள் தருவோம் என்றுத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், நாட்டின் தலைநகரான டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர் நோக்கி சென்ற ஏ.ஐ.173 என்ற எண் கொண்ட ஏர் இந்தியாவின் போயிங் 777 ரக விமானம் புறப்பட்டு சென்றபோது, திடீரென விமான என்ஜின் பழுதடைந்தது.
இதனால், அந்த விமானம் ரஷியாவின் மகதன் விமான நிலையம் நோக்கி திருப்பி விடப்பட்டு, பாதுகாப்பாக தரையிறங்கியது. அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து மாற்று விமானம் உதவியுடன் விமான பயணிகள் அனைவரும் ரஷியாவில் இருந்து, சான் பிரான்சிஸ்கோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
air india flight cancelled san fransisco to mumbai