வடகொரியாவுக்கு எதிராக.. அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சி.!
America Japan South Korea naval exercises against North Korea
கொரிய தீபகற்பத்தில் கடந்த ஓராண்டாக அமெரிக்க படைகளும், தென் கொரிய படைகளும் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதை எதிர்த்து வடகொரியா அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்து அச்சுறுத்தி வருகிறது. மேலும் இரண்டு வாரங்களுக்கு முன்பு வடகொரியா நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத சோதனை நடத்தியது கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை அதிகரிக்க செய்தது.
இந்நிலையில் தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தென்கொரியாவின் ஜெஜுவு தீவுக்கு அருகே கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தென்கொரியா பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்தது. இந்த பயிற்சியில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானம் தாங்கி கப்பல் மற்றும் ஜப்பானின் கண்காணிப்பு மற்றும் ஏவுகணை தாங்கிய கப்பல்களும் பங்கு பெற்றன.
மேலும் இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வடகொரியாவால் நீருக்கடியில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்கவும், மூன்று நாடுகளும் திறனை மேம்படுத்துவதற்காக இந்த பயிற்சி மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து நீருக்கடியில் கண்காணிப்பு பணியை மேற்கொள்வதற்கும், நீர்மூழ்கி கப்பல் தடுப்பு பயிற்சிகளும் மூன்று நாடுகளும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
America Japan South Korea naval exercises against North Korea