இந்தியர்களுக்கு விசா தர தாமதப்படுத்தும் அமெரிக்கா.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வோருக்கான விசா கிடைப்பதில் நீண்ட காலதாமதம் நிலவுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றனர். 

விசா வருவதற்கு ஏற்படும் தாமதத்தால் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களும், மாணவர்களும் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகக் தெரிவிக்கப்படுகிறது. இந்த பதிவுகளில், சிலர் ஓராண்டுக்கு மேலாக விசாவிற்கு காத்திருப்பதாகவும்,தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், வாஷிங்டனில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த போது, "இந்த பிரச்னை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்துள்ளார். 

கொரோனாவுக்கு பின் ஆட்குறைப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் விசா தர தாமதம் ஏற்படுவதாக, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.  

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america visa late in indian people


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->