கைதிகள் பரிமாற்றம் : தாயகத்திற்கு திரும்பிய அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை.! - Seithipunal
Seithipunal


ரஷியா மற்றும் உக்ரைனுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடங்கியது. தற்போதுவரை இந்த போர் ஒரு தொடர்கதையாகி வருகிறது. இந்தப் போரை தடுக்கும் வகையில் ரஷியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.

அத்துடன், பல்வேறு மேற்கத்திய நாடுகளையும் ரஷியாவுக்கு எதிராக ஒன்று திரட்டியது. இதனால், அமெரிக்கா-ரஷியாவிற்கிடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷியாவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனா்ஸ் சென்றார். அங்கு பிரிட்னி மீது போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் அவர் கைது செய்யப்பட்டார். 

இதையறிந்த அமெரிக்க மக்கள் கிரைனா்சை மீட்க வேண்டுமென்று அதிபா் ஜோ பைடனுக்கு அழுத்தம் கொடுத்தனர். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் பிரிட்னி கைது செய்தது தொடர்பாக ரஷிய அரசுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. 

அப்போது, அமெரிக்க சிறையில் ஆயுத வியாபார குற்றச்சாட்டில் 10 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள ரஷியாவை சேர்ந்த விக்டர் பவுட்டை விடுவிக்க வேண்டும் என்று ரஷியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதற்கு அமெரிக்கா தயக்கம் காட்டி வந்தது. 

இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்ற கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் இரண்டு பேரும் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து இருவரும் விமானத்தின் மூலம் அபுதாபி அழைத்து செல்லப்பட்டு, அதன் பின்னர் அங்கிருந்து தங்களின் தாயகத்துக்கு சென்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American basketball player return homecountry


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->