கைலாசாவை தனி நாடாக அங்கீகரித்த அமெரிக்க நகர நிர்வாகம்.! - Seithipunal
Seithipunal


பாலியல் வழக்கு, கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா, 2019-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார். இந்துக்களுக்கு என தனி கைலாசா நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக பிரகடனபடுத்திய அவரை போலீசார் தேடி வரும் நிலையில், அவர் எங்கிருக்கிறார் என இதுவரை கண்டறிய முடியவில்லை.

அவ்வப்போது பக்தர்களுக்கு சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவுகளை சமூக வலைதளங்களின் மூலமாக ஆற்றி வருகிறார். இந்த நிலையில் அவர், கடந்த சில வாரங்களாக செயல்படாமல் இருந்தார். இதனால் அவருக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் அவர் மரணமடைந்து விட்டதாகவும் வதந்திகள் கிளப்பி வந்தனர். அவற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அவரே கைப்பட எழுதிய கடிதம் ஒன்றினை வெளியிட்டார்.

இந்த நிலையில் கைலாசாவை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய அமெரிக்காவுடன் ஜனவரி 11ஆம் தேதி இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

ஐக்கிய கைலாசா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரமும் இருதரப்பு நெறிமுறை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழா நெவார்க் நகர அரங்கில் நடைபெற்றது. 

இந்த விழாவில் ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயப்ரியா நித்யானந்தா, மேயர் பராகா, துணை மேயர் டிஃப்ரீடாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.  அமெரிக்காவின் நெவார்க் நரத்துடனான ஒப்பந்தத்தில், ஒரு தரப்பு மக்களின் மேம்பாட்டிற்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

American city administration recognized Kailash as a separate country


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->