தைவான் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்.! தென் சீன கடல் பகுதியில் போர் பதற்றம் - Seithipunal
Seithipunal


தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதியாக சீனா நினைத்து வரும் நிலையில், சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி தைவானுக்கு வருகை தந்தார்.

மேலும் அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 முறை தைவான் சென்றனர். தைவானின் இந்த நடவடிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்ததுடன் தைவான் எல்லையில் போர் பயிற்சி மேற்கொண்டது.

இதனால் இரு நாடுகளுக்கிடையே போர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென் சீன கடல் பரப்பில் சீனாவுக்கும், தைவான் நாட்டிற்கும் இடையேயான நீர் சந்திப்பில் அமெரிக்காவின் யுஸ்ஸ் ஆன்டிடாம் மற்றும் யுஸ்ஸ் சான்சிலர்ஸ்வில்லே ஆகிய இரண்டு ஏவுகணை தாங்கிய போர்க்கப்பல்கள் நுழைந்துள்ளன.

ஏற்கனவே தைவான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் நுழைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American warships entered into Taiwan border


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->