ஊழலில் சிக்கிய சாம்சங் நிறுவன உரிமையாளருக்கு பொதுமன்னிப்பு.!  - Seithipunal
Seithipunal


சாம்சங் நிறுவனத்தின் உரிமையாளரும், உலகின் 278-வது பணக்காரருமான லீ ஜே யங் மீதான ஊழல் குற்றச்சாட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம்  நிரூபணமானது.

இதன் பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டார். 

இந்த நிலையில் தென் கொரிய பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் லீ  ஜே யங் உடன் சேர்த்து மொத்தம் மூன்று தொழில் அதிபர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், தொழில்நுட்பத் துறையில் முதலீடுகளைப் பெருக்கி வேலை வாய்ப்புகளை உருவாக்கி பொருளாதாரத்தை சீரான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல லீ ஜே யங் உதவுவார் என்று தென் கொரிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amnesty Samsung company owner scandal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->