ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம் - அரசு அதிரடி நடவடிக்கை - Seithipunal
Seithipunal


வட அமெரிக்க நாடான கனடா, சிகரெட் மற்றும் புகையிலை பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு சிகரெட்டிலும் சுகாதார எச்சரிக்கை வாசகங்களை அச்சிடப்பட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தனி சிகரெட்களில் எச்சரிக்கை வாசகங்களை அச்சிடும் உலகின் முதல் நாடாக கனடா உருவெடுத்துள்ளது.

இது தொடர்பாக மே 31ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு சிகரெட்டிலும் புகையிலையின் புகை குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும், புகையிலை புற்றுநோயை உருவாக்கும் என வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் அச்சிடப்பட வேண்டும்.

இந்த புதிய விதிகள் ஆகஸ்ட் 1 முதல் படிப்படியாக நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிங் சைஸ் சிகரெட்டுகளில் ஜூலை 2024 இறுதிக்குள் தனிப்பட்ட எச்சரிக்கைகள் இருக்க வேண்டும் என்றும், வழக்கமான அளவிலான சிகரெட்டுகளில் ஏப்ரல் 2025 இறுதிக்குள் தனிப்பட்ட எச்சரிக்கைகள் இருக்க வேண்டும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் 2035ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் புகையிலை நுகர்வு, 5 சதவீதத்திற்கும் கீழ் குறைக்கப்பட வேண்டும் என கனடா நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி ஜீன் யூவ்ஸ் டுக்லோஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anti Tobacco Slogans on Every Cigarette in canada


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->