"பிரதமர் மோடியால் சாத்தியம்" - பாராட்டி தள்ளிய பாகிஸ்தான் இஸ்லாமியர்கள்! - Seithipunal
Seithipunal


"பிரதமர் மோடியால் எதுவும் சாத்தியம்" என்று ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள், நம் பிரதமர் மோடியை பாராட்டி தள்ளியுள்ளார்.

ஆஸ்திரேலிய நாட்டின் தலைநகர் மெல்பர்னில் உலக நல்லெண்ணம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை டெல்லி என்ஐடி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்து இருந்தது. 

நிகழ்ச்சியில் இந்தியர்கள் மட்டுமில்லாது உலகின் பல்வேறு தரப்பை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர். முக்கியமாக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

அதில், லாகூரை பூர்விகமாக கொண்ட மருத்துவர் தாரிக் பட் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அவரின் அந்த உரையில், "உலகின் அனைத்து இன, சமுதாய மக்களையும் மதிக்கும் திறன் படைத்தவர் இந்தியப் பிரதமர் மோடி. இந்திய நண்பர்கள் எனக்கு அதிகம். நாங்கள் இங்கு ஒன்றாக தான் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்திய-பாகிஸ்தானிய இஸ்லாமியர்களுக்கு இடையே இப்போது அதிக தொடர்பு உள்ளது. நாங்கள் பிளவுபடுத்துபவர்களை விட பொதுவான நபரை கொண்டுவர விரும்புகிறோம். பிரதமர் மோடி இருந்தால் அதுமட்டுமல்ல எதுவும் சாத்தியம். நல்லிணக்கம் மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்காக நடக்கும் இந்த நிகழ்ச்சி சிறந்த முன்முயற்சி. 

இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சரியானதைச் செய்து வருகிறார். எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவரை பின்பற்றும் ஈர்ப்பை அவர் கொண்டுள்ளார்" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aus Islam People wish PM Modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->