2022ஆம் ஆண்டு மிகப்பெரிய சுனாமி, நாடுகளுக்கு இடையே போர், பசி, பஞ்சம் - பாபா வங்கா கணிப்பு.!
baba vanka 2022
சோபியா: பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டி பாபா வங்கா. எதிர்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே கணித்து கூறியவர்.
வருகின்ற 2022ஆம் ஆண்டு என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என்பது குறித்து பல்கேரியா நாட்டை சேர்ந்த மூதாட்டி 'பாபா வங்கா' கணித்து வைத்துள்ளார். அவரின் அந்த கணிப்புப்படி,
* விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்கி அழிக்கும். இதன்காரணமாக பஞ்சம் தலைவிரித்தாடும்.
* உலகில் உள்ள பெரிய நகரம் நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
* ஆறுகள், நதிகள் மாசுபாட்டால் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். இதனால் போர் உருவாகும் .
* ஆஸ்திரேலியாவும், ஆசிய நாடுகளும் கடுமையான வெள்ளப் பெருக்கினால் பாதிப்படையும்.
* பூகம்பம், சுனாமி போன்ற ஆபத்துகள் அதிகரிக்கும். சுனாமி காரணமாக பல ஆயிரம் மக்கள் இழக்கக்கூடும்.
* உறைந்த நிலையில் இருக்கக்கூடிய ஒரு கொடிய வைரஸை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள் என்று, மூதாட்டி 'பாபா வங்கா' கணித்து வைத்துள்ளார்.
'பாபா வங்கா' என்ற மூதாட்டி யார்? என்பதை பற்றி பார்ப்போம். இவர் கடந்த 1996ஆம் ஆண்டு 84 வயதில் மூதாட்டி 'பாபா வங்கா' உயிரிழந்து விட்டார். ஆம்., அவர் தற்போது உயிருடன் இல்லை.
ஆனால், இவர் அடுத்து வரக்கூடிய ஒவ்வோராண்டும் என்ன நடக்கும்., இந்த உலகம் எப்போது அழியும் என்பது குறித்து கணித்து வைத்து விட்டு சென்றுள்ளார். அவரின் கணிப்புப்படி 5079 ஆம் ஆண்டு வரை இந்த உலகம் இருக்கும்.
கடந்த 2004ம் ஆண்டு அவர் எழுதி வைத்ததுபோல சுனாமி தாக்கியது. மேலும் அமெரிக்க அதிபர் ஒபாமா பதவி ஏற்றது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் இவர் கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.