தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்.! நியூயார்க்கில் 21 வயதுக்குட்பட்டோர் துப்பாக்கி வாங்க தடை.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலியானவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தத் துப்பாக்கி சூடு சம்பவங்கள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் இடையே பொது இடங்களுக்கு வர முடியாத அளவிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.

இந்நிலையில் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் ஜோபைடன் அறிவித்திருந்த நிலையில்,  நியூயார்க் மாகாணத்தில் துப்பாக்கி உரிமை சட்டம் கடுமையாக கொண்டுவரப்பட்டுள்ளன.

இதில் நியூயார்க்கில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பு 18 லிருந்து 21 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கவச உடை பொதுமக்கள் வாங்குவதற்கும் இந்தச் சட்டத்தின் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான துப்பாக்கி சீர்திருத்தங்கள் மாகாண செனட்டில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த சட்டத்துக்கு மாகாண கவர்னர் கேந்தி ஹோச்சுல் ஒப்புதல் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ban for under twenty one age to buy guns in newyork


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->