மங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டல் நீச்சல் குளத்தில் பிணமாக மிதந்த கேரள வங்கி ஊழியர்!
bank employee found dead hotel swimming pool
கர்நாடகா, மங்களூருவில் உள்ள ஒரு பிரபல தனியார் ஹோட்டல் நீச்சல் குளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்து கிடப்பதாக மங்களூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் பிணமாக கிடந்தவர் கேரளா, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கோபு.ஆர். நாயர் (வயது 38) என்பதும் இவர் வங்கி ஊழியராக பணியாற்றினார் என்பதும் தெரிய வந்தது.
மேலும் இவர் மங்களூருவில் நடைபெற்ற வணிக மாநாட்டில் பங்கேற்க வந்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் கோபு. ஆர். நாயர் நேற்று காலை ஹோட்டலுக்கு வந்தது மாலை 4 மணி அளவில் நீச்சல் குளத்திற்கு நீச்சல் அடிப்பதற்காக சென்ற போது உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது.
அவர் குடிபோதையில் நீச்சல் குளத்தில் நீந்தியதால் கட்டுப்பட்ட இழந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதனை அடுத்து போலீசார் ஹோட்டலில் இருந்த சி.சி.டிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மதுபோதையில் கோபு நீச்சல் குளத்தில் நிலைதடுமாறி உயிரிழந்த காட்சிகள் பதிவாகி இருந்தன.
பின்னர் அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து மங்களூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
bank employee found dead hotel swimming pool