இரண்டாவது நாளாக கரை ஒதுங்க திமிங்கலங்கள்! என்ன நடக்கிறது ஆஸ்திரேலியாவில்! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவின் டாஸ்மோனியா தீவில் இரண்டாவது நாளாக சுமார் 200க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது!

ஆஸ்திரேலிய நாட்டின் டாஸ்மேனியா தீவில் உள்ள மேக்வாரை துறைமுகத்துக்கு அருகே நேற்று முன்தினம் 200க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் உயிரிழந்தது தெரிய வருகிறது.

அவற்றில் உயிருடன் உள்ள திமிங்கலங்கள் மீட்டு மீண்டும் கடலுக்குள் விடுவதற்கான முயற்சியில் கடற்படையினரும் தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய பகுதி மிகவும் சிக்கலானது என்பதால் மீட்பு குழுவினால் உடனடியாக செல்ல இயலவில்லை. எனினும் உள்ளூர் மக்கள் போர்வையால் முடியும் வாளியால் தண்ணீர் இறைத்தும் திமிங்கலத்தை உயிருடன் வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

இதேபோல் இரண்டாவது நாளாக சுமார் 230 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன மேற்கு கரையோர பகுதியில் ஒதுங்கிய இவை பைலட் வகை திமிங்கலங்கள் என அறியப்பட்டுள்ளது. இவற்றில் 50 சதவீதம் வரை உயிருடன் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடல் பாதுகாப்பு நிபுணர்கள் குழு அப்போது பகுதிக்கு சென்று அவற்றை மீட்க முயன்று வருகின்றனர். தேவைப்பட்டால் பொதுமக்கள் உதவியை நாட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் திமிங்கங்களுக்கு ஒதுங்குவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக உள்ளது.

கடல் ஆராய்ச்சியாளர்கள் இதைப் பற்றி கூறும் பொழுது பொதுவாக ஹேப் எனப்படும் ஒருவகை கிருமி தோற்றால் பாதிக்கப்படும் திமிங்கலங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு கரை ஒதுங்கும். அதை தவிர இறைதேடி முன்னே சொல்லும் திம்பிகளங்களை பின்னால் வரும் திமிங்கலம் தவற விட்டால் அவை வழி தவறி இவ்வாறு கரை ஒதுங்கும் எனவும் கூறப்படுகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Beached whales for the second day What is happening in Australia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->