அசைவம் சாப்பிடும் ஆண்கள் கவனத்திற்கு.. அந்த உறவுக்கு ஆப்படித்த பீட்டா.! - Seithipunal
Seithipunal


நான்வெஜ் சாப்பிடும் ஆண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று பீட்டா அமைப்பு தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பீட்டா அமைப்பு, அசைவம் சாப்பிடும் ஆண்களுடன் உடலுறவை நிறுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும், மாமிசம் சாப்பிடும் ஆண்கள் 41 சதவீதம் கூடுதல் கார்பனை வெளியிடுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், நகர்ப்புறத்தில் வாழும் ஆண்கள் ஒரு கையில் மது பாட்டில்களுடன், அசைவ உணவை உண்கின்றனர். அசைவ உணவுகளை உண்பதை ஆண்கள் பெருமையாக நினைக்கின்றனர். மேலும், அதை மற்றவர்களிடம் பெருமையாகவும் கூறுகின்றனர்.

அசைவ உணவு சாப்பிடுவதனால் சாப்பிடுவதனால் விலங்குகளை அழிப்பது மற்றும் துன்புறுத்துவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிப்பதாக பீட்டா தெரிவித்துள்ளது. 

மேலும், தற்போது பருவநிலை மாற்ற பிரச்னைகள் அதிகரித்து வருவதற்கு ஆண்கள்தான் முக்கிய காரணம் என்பதை ஆய்வுகள் தெரிவித்துள்ளதாக பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே அசைவ உணவு சாப்பிடும் ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என பீட்டா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Beta invite to sex strike for eat nonveg man's


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->