அமெரிக்காவில் முக்கிய பதவி பெற்ற 4 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள்.! - Seithipunal
Seithipunal


அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியின் எம்.பி.க்களும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுமான ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமி பெரா, பிரமிளா ஜெயபால் மற்றும் ரோகன்னா உள்ளிட்டோர் அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் முக்கிய குழுக்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில், ராஜா கிருஷ்ணமூர்த்தி அமெரிக்காவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் சபையில் சீனாவுக்கான 'ரேங்கிங்' குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு, சீனாவின் நடத்தையின் பல்வேறு அம்சங்கள், அமெரிக்காவிற்கும் உலகத்திற்கும் சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்த விவகாரங்களை இந்தக் குழு கவனிக்கும். 

இதையடுத்து, அமி பெரா, முக்கியத்துவம் பெற்ற பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழு மத்திய புலனாய்வு அமைப்பு, தேசிய புலனாய்வு இயக்குனரின் அலுவலகம், தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் ராணுவ உளவுத்துறை உள்ளிட்ட நாட்டின் உளவுத்துறை அமைப்பின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும். 

இதைத்தொடர்ந்து, பிரமிளா ஜெயபால், பிரதிநிதிகள் சபையின் நீதித்துறை குழுவின் 'ரேங்கிங்' உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குடியேற்ற துணைக்குழுவுக்கு தலைமை தாங்குவார். 

மேலும், ரோகன்னா, சீன கம்யூனிஸ்டு கட்சியுடனான அமெரிக்காவின் பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு போட்டி தொடர்பான புதிய குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

big responsibility to four indian origin mps to in america


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->