ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ராக்கெட் ஏவும் திட்டம் தோல்வி.!
Blue Origin rocket fails to launch in space
ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ராக்கெட் விண்ணில் ஏவும் திட்டம் தோல்வியடைந்துள்ளது.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ஷெப்பர்ட் ராக்கெட், அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசாவின் திட்டங்களுக்கும், விண்வெளிக்கு பொருட்களை அனுப்பும் நோக்கத்துடன் மேற்கு டெக்சாஸில் உள்ள ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆனால் விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே ராக்கெட்டின் பின்பகுதியில் உள்ள பூஸ்டர் எஞ்சின் எதிர்பாராதவிதமாக எரிந்து தடை செய்யப்பட்ட பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து ராக்கெட்டின் மையப்பகுதியான கேப்சூல் பகுதி மட்டும் பாராசூட் வழியாக தனியாகப் பிரிந்து கீழே இறங்கியது. மேலும் விண்வெளி வீரர்கள் இல்லாமல் ராக்கெட் ஏவப்பட்டுள்ளதால் விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
English Summary
Blue Origin rocket fails to launch in space