பிரேசில் கலவரம்: முன்னாள் அதிபர் போல்சனாரோ மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு.!
Bolsonaro to be questioned by Brazil supreme court over riot
பிரேசிலில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பிரேசிலின் அதிபராக பொறுப்பேற்றார்.
ஆனால் தோல்வியை ஏற்க மறுத்த போல்சனேரோ, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பாராளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் அதிபர் மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் ஆகிய கட்டிடங்களுக்குள் புகுந்து அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த, போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், கலவரத்தில் ஈடுபட்டதாக 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பாராளுமன்ற கலவரம் தொடர்பாக பிரேசில் சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் விசாரணையை நடத்தியது.
இந்த விசாரணையில் கலவரத்தை தூண்டிவிட்டது தொடர்பாக முன்னாள் அதிபர் போல்சனாரோவும் சேர்க்கப்பட வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ், நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக, கலவரத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு முன்னாள் அதிபர் போல்சனாரோ பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோவை மேற்கோள் காட்டி, போல்சனாரோ மீது விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
Bolsonaro to be questioned by Brazil supreme court over riot