உக்ரைன் துறைமுகத்திலிருந்து சரக்கு கப்பல்கள் தானியங்களுடன் புறப்பட தயாராக உள்ளது - துருக்கி - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனின் துறைமுகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றின.

இதனால் தானிய ஏற்றுமதி முற்றிலும் தடைபட்டிருந்தது. மேலும் உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானியங்கள் ஏற்றுமதியாளராக இருந்து வரும் சூழலில் ஏற்றுமதி தடைபட்டதால் சர்வதேச அளவில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஐ.நா மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் உக்ரைன், துருக்கி மற்றும் ரஷ்யா இடையேயான கையெழுத்தானது.

இதையடுத்து உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் ரஷ்யா படையெடுப்பிற்கு பிறகு முதல் முறையாக தானிய ஏற்றுமதியை உக்ரைன் தொடங்கியிருந்தும் தானியங்கள் ஏற்றப்பட்ட பல கப்பல்கள் புறப்பட முடியாமல் துறைமுகத்தில் உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஒடேசா துறைமுகத்தில் இருந்து தானியம் ஏற்றப்பட்ட முதல் சரக்கு ரசோனி கப்பல் 26,000 டன் தானியங்களுடன் லெபனானின் திரிபோலிக்கு புறப்பட உள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cargo ship ready to go for export from ukraine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->