நடுவானில் விமான ஊழியரிடம் தகராறு செய்த நேபாள பயணி - ஏர் இந்தியாவில் தொடரும் அட்டூழியம்.!
case file on nepal passenger for fight to staff in air india flight
நடுவானில் விமான ஊழியரிடம் தகராறு செய்த நேபாள பயணி - ஏர் இந்தியாவில் தொடரும் அட்டூழியம்.!
கனடா நாட்டில் உள்ள டொரண்டோ நகரில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இதில் பயணம் செய்த நேபாள நாட்டு பயணி ஒருவர் திடீரென ஊழியர்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த விமானத்தின் மேற்பார்வையாளரான ஆதித்ய குமார், டெல்லி போலீசில் எப்.ஐ.ஆர். ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில், "மகேஷ் சிங் பண்டிட் என்ற நேபாள நாட்டை சேர்ந்த பயணி தனது இருக்கையில் இருந்து வேறு இருக்கைக்கு சென்று உள்ளார். அதன்பின், விமான ஊழியர்களிடம் தகாத முறையில் நடந்து உள்ளார். ஊழியர்கள் இதுபற்றி விமானிக்கு தகவல் தெரிவித்து விட்டு, அந்த பயணிக்கு எச்சரிக்கையும் விடுத்து உள்ளனர்.
ஆனால், அந்த பயணி மதிய உணவு முடிந்த பின்னர், கழிவறையில் சிகரெட் புகைத்துள்ளார். இதை கவனித்த ஊழியர் கழிவறையின் கதவை திறந்து பார்த்துள்ளார். உடனே, அவர் ஊழியரை தள்ளி விட்டு விட்டு, இருக்கைக்கு சென்று அமர்ந்து கொண்டார். மேலும், அந்த பயணி கழிவறையின் கதவையும் உடைத்து உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, விமானியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில், விமான ஊழியர் நான்கு பயணிகள் உதவியுடன், அந்த பயணியை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளார். ஆனால், அந்த பயணிகளையும் அவர் அடிக்க முயற்சித்துள்ளார்" என்று அதில் தெரிவித்து உள்ளார்.
இதன் புகாரின் படி டெல்லி போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சம்பவம் தொடர்பானது தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
case file on nepal passenger for fight to staff in air india flight