போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்!
Catholic churches Pope Francis funeral vatican
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் 266வது தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த 21ஆம் தேதி வாடிகனில் உடல்நலக்குறைவால் மறைந்தார். அவரது விருப்பத்தின் படி, வாடிகன் நகருக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காவில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
23ஆம் தேதி முதல் அவரது உடல் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து வந்த ஆயிரக்கணக்கானோர் நீண்ட நேரம் காத்திருந்து போப்பின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முதல் இரண்டு நாள்களில் அஞ்சலி செலுத்தினர்.
நேற்றும் தொடர்ந்த இந்த அஞ்சலிக்கு மக்கள் பெருமளவில் திரண்டனர். பின்னர், மாலை நேரத்தில் பொதுமக்கள் அஞ்சலி நிறைவு பெற்றது. போப்பின் உடல் பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டு இறுதிச்சடங்குகளுக்காக தயார் செய்யப்பட்டது.
வாடிகனில் பாரம்பரிய முறையில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து வந்த கிறிஸ்தவ பேராயர்கள் மற்றும் அரசுத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
பின்னர், போப்பின் உடல் புனித மேரி பசிலிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டோர் சார்பாக அமைந்த குழுவினர் இறுதிச் சடங்கில் அவர் மீது அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் 250,000 பேர் கலந்து கொண்டனர். 50 நாட்டுத் தலைவர்கள் மற்றும் 150 நாட்டுத் தூதுவர்கள் பங்கேற்றனர். இந்தியாவைச் சார்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார்.
English Summary
Catholic churches Pope Francis funeral vatican