அமெரிக்கா சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்! தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு!
Chief Minister M.K.Stalin arrived in America An enthusiastic welcome to the Chief Minister of Tamil Nadu
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன் தினம் இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இதன்படி தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் அரசு முறைப் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இப்பயணத்தின் போது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இந்நிலையில், நேற்று பிற்பகல் முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் வழியாக அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு முதல்வருக்கு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது சென்றடைந்துள்ளார். இன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.
மேலும் 31ம் தேதி புலம்பெயர்ந்த தமிழர்களை முதல்வர் சந்தித்து பேசுகிறார். செப் 2ம் தேதி சான்பிரான்ஸ்கோவில் இருந்து சிகாகோ செல்கிறார். அங்கு 10 நாட்கள் முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் தொடங்க முதல்வர் அழைப்பு விடுகிறார்.
செப்14ம் தேதி அமெரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
English Summary
Chief Minister M.K.Stalin arrived in America An enthusiastic welcome to the Chief Minister of Tamil Nadu