உக்ரைன் போர் நிலைப்பாட்டில் சீனா நடுநிலைக் கொள்கையுடன் உள்ளது - வெளியுறவு மந்திரி
China foreign minister says China remains neutral on Ukraine war stance
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் 10 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரை முடிவுக்கு கொண்டுவர ஐநா மற்றும் உலக நாடுகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
மேலும் இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்களையும் வழங்கி உதவி வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்கா, உக்ரைன் போர் விவகாரத்தில் சீனா ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டியநிலையில், உக்ரைன் போர் விவகாரத்தில் நடுநிலை கொள்கையுடன் இருக்கிறோம் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, உக்ரைன் போர் பொறுத்தவரை, ஒரு சார்பாக செயல்படாமல், அதாவது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றாமல் நடுநிலை தன்மையின் அடிப்படைக் கொள்கைகளை நாங்கள் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறோம் என்றார்.
மேலும் ரஷ்யாவுடன் சீனா பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை தொடர்ந்து ஆழப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
China foreign minister says China remains neutral on Ukraine war stance