உற்பத்தியை பெருக்க விவசாய நிலங்களை மேம்படுத்தும் சீனா.!! - Seithipunal
Seithipunal


ஆசிய நாடான சீனாவில் உயர்ந்து வரும் மக்கள் தொகையினால் அத்தியாவசிய உணவு பொருள்களின் தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் உணவு உற்பத்தியை மேம்படுத்தும் முயற்சியில் சீனா களமிறங்கியுள்ளது.

சீனாவில் விவசாய உற்பத்தியை பாதிக்கும் காரணிகளாக நீர், மின்சார பரிமாணம் மற்றும் பருவநிலை மாறுபாடு ஆகியவை உள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு விவசாய நிலங்களை உயர்தர விவசாய நிலங்களாக மாற்றும் முயற்சியை தொடங்கியது.

இந்த உயர்தர விவசாய நிலங்களில் உயர்தர நீர் பாசன வசதிகள், தேவைக்கேற்ப மின் பயிர்மாணம் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பு ஆகிய பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மட்டும் 74 லட்சம் ஏக்கர்களை உயர்தர விவசாய நிலங்களாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கை விட அதிகமாக ஒரு கோடியே 73 லட்சம் ஏக்கர்களை உயர்தர நிலங்களாக சீனா மாற்றியுள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக விவசாய நிலங்களை மேம்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China improve agriculture land to high tech land for production


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->