பயிர்களை காக்க செயற்கை மழையை உருவாக்க சீனா முடிவு
China planning for artificial rain to protect crops
சீனாவில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் பல மாகாணங்களில் 40 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமாக வெப்பநிலை நிலவி வருகிறது. குறிப்பாக சிச்சுவான் மாகாணத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை கடந்தது.
மேலும் நீா்த்தேக்கங்களில் நீா்மட்டத்தின் அளவு பாதியாக குறைந்துவிட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின்சாரத்தை சேமிப்பதற்காக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சீனாவின் ஆண்டு மொத்த உற்பத்தியில் இலையுதிா் கால அறுவடை 75% பங்கு வகிப்பதால், எவ்வித சேதமும் ஏற்படாமல் அறுவடையை உறுதிப்படுத்த அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வேளாண்துறை அமைச்சர் தாங் ரெஞ்சியன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நெற்பயிரில் சேதத்தைக் குறைப்பதற்காக மேகத்தில் ரசாயனத்தை தூவி, செயற்கை மழையை உருவாக்கும் மேக விதைப்புத் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக வேளாண் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் செயற்கை மழை பொழிவதற்கான இடம் குறித்து எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.
English Summary
China planning for artificial rain to protect crops