தான் வளர்த்த தாடியை வச்சே.. கின்னஸ் சாதனை.. இது தான் விஷயம்.!
Christmas Jingles in Beard In america who record makes Guinness
தான் வளர்த்த தாடியை பயன்படுத்தி ஒரு நபர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஜோயல் ஸ்ட்ராஸர் எனும் நபர் நான்கு ஆண்டுகளாக தன்னுடைய தாடியில் கிறிஸ்மஸ் அலங்காரம் செய்து வருகின்றார் இந்த சாதனையானது தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது
கடந்த 2019 முதல் இவர் தனது தாடியில் கிறிஸ்மஸ் அலங்காரத்தை மேற்கொண்டு வருகிறார். 2019ல் 302 மணிகளை அதில் பயன்படுத்தினார். பின் 2020ல் 542 மணிகளும், 2021ல் 686 மணிகளையும் தாடியில் கோர்த்து இருக்கின்றார்.
அந்த வகையில் 2022 கிறிஸ்துமஸை முன்னிட்டு 710 மணிகளை தனது தாடியில் அவர் கோர்த்து நான்கு ஆண்டு சாதனைகளை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று இருக்கின்றார். அவரது தாடியுடன் கூடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Christmas Jingles in Beard In america who record makes Guinness