அரசு அதிகாரிகள் டவுசர் அணிந்து அலுவலகங்களுக்கு வரலாம் - மத்திய அரசு உத்தரவுக்கு காங்கிரஸ் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


அரசு ஊழியர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்ற விதி தற்போது நடைமுறையில் உள்ள நிலையில், அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருவதையடுத்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-

“நாட்டில் காந்திஜியின் படுகொலையைத் தொடர்ந்து 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சர்தார் படேல் ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்தார். பின்னர், நன்னடத்தை உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் இந்த தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. 

இருப்பினும், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மூவர்ணக் கொடி பறக்கவிடவில்லை. ஆனால், கடந்த 1966ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளில் ஈடுபட அரசு ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஜூன் 4, 2024-க்குப் பிறகு, தன்னைத்தானே புனிதராகவும், உயிரியல் ரீதியில் பிறக்காதவர் என்றும் அறிவித்துக் கொண்ட பிரதமருக்கும் ஆர்.எஸ்.எஸ்- க்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்துவிட்டதால் அதனை சரிசெய்ய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் அரசு அதிகாரிகள் டவுசர் அணிந்து கொண்டு அலுவலகங்களுக்கு வரலாம்” என்று விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass condems government employee joining rss meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->