ஒரே மாதத்தில் 5 லட்சம் பேர் இறப்பார்களா? அதிரவைக்கும் கொரோனா குறித்த செய்தி!
Corona In China 012022
ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து வெளியாகும் செய்தி ஊடகம் ஒன்று, சீனாவில் தினந்தோறும் கொரோனாவால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை ஒன்பதாயிரமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த செய்தி ஆஸ்திரேலிய ஊடகச் செய்தியிலிருந்து தொகுத்து வழங்கப்படுகிறது ::
பிரிட்டிஷ் ஏர்ஃபினிடி என்ற ஆய்வு நிறுவனம், சீனாவில் கொரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கையை 2 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் கொரோனாவின் பாதிப்பும் பல மடங்கு அதிகரித்து இருந்ததும் சீனாவில் கொரோனா கால கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தி இருந்தது.
இதன் எதிரொலியாக தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பு மிக கடுமையாக அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கிவிட்டது.
மொத்தமாக அந்நாட்டில் கிட்டத்தட்ட 1.8 கோடியாக பாதிப்பு உள்ளதாகவும் அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது வரும் ஜனவரி மாதத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனாவுக்கு பாதிக்கப்படுவோர்களின் விகிதம் 30 லட்சமாக இருக்கக் கூடும் என்றும், 5 இலட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.