அமெரிக்க குடியுரிமை - ட்ரம்பின் அறிவிப்புக்கு இடைக்காலத்தடை.!
court temporarily lock trumph america citizenship
அமெரிக்கா நாட்டின் 47-வது குடியரசுத் தலைவராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20-ந்தேதி பதவியேற்றார். அதன் பின்னர் அவர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதிலும் குறிப்பாக பிறப்புரிமை அடிப்படையில் தானாக அமெரிக்க குடியுரிமை பெறும் நடைமுறையை ரத்து செய்வதாக அறிவித்தார். டிரம்ப்பின் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் பட்சத்தில், இனி அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் எவரும் அமெரிக்க குடியுரிமையை கோரமுடியாது.
அதே போல், அமெரிக்க குடியுரிமை அல்லாத பெற்றோரிடம் கிரீன் கார்டு இல்லாவிட்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அமெரிக்க குடியுரிமை கிடைக்காமல் போய்விடும்.
இந்த உத்தரவு பிப்ரவரி 20-ந்தேதி முதல் அமலுக்கு வரும் நிலையில், இதை எதிர்த்து வாஷிங்டன், அரிசோனா, இலினாயிஸ் மற்றும் ஓரிகான் உள்ளிட்ட மாகாண நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது, டிரம்ப்பின் அறிவிப்புக்கு தற்காலிக தடை விதித்து சியாட்டில் நீதிமன்றம் உத்தரவிட்டது.
English Summary
court temporarily lock trumph america citizenship