சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்! ஷாங்காய் நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சீனாவின் ஷாங்காய் நகரில் வாழும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஷாங்காய் நகரில் மிகத் தீவிரமாக தொற்று பரவி வருகிறது. இந்நிலையி, ஷாங்காய் நகரில் வாழ்ந்து வரும் 2 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரொனா பரிசோதனை செய்ய வேண்டும் என சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக ஆயிரக்கணக்கான சுகாதார பணியாளர்கள் மற்றும் இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ மருத்துவர்கள் மற்றும் இராணுவ படையினர் உட்பட 10 ஆயிரத்திற்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் ஷாங்காய் நகருக்கு அனுப்பபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்றைய நிலவரப்படி 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் ஷாங்காய் நகரில் வாழும் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Covid test for all in Shanghai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->