ஷாங்காய்.! ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களில் மீண்டும் ஊரடங்கு அமல்.!
Curfew again in shanghai
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக சீனா ஷாங்காய் நகரில், தளர்வுகள் அறிவிக்கப்பட்ட இரு நாட்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் பெரிய நகரமான ஷாங்காய் நகரில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா தொற்று அதிகரிப்பால் கடந்த வாரம் வரை ஊரடங்கு அமலில் இருந்தது.
இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து ஜூன் 1ம் தேதி முதல் ஷாங்காய் நகர் முழுவதும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு, பொது போக்குவரத்து, கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சீனாவின் ஜிங்கன் மற்றும் புடாங் மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், மீண்டும் 14 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
சீனாவின் ஜீரோ கோவிட் கொள்கையின்படி ஊரடங்கு நாட்களில் மெகா பரிசோதனை, முகக்கவசம் அணிதல், தனிமைப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.