ஷாங்காய் நகரில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்த முடிவு.!
Curfew relaxation in shanghai
ஷாங்காய் நகரில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவின் ஷாங்காய் நகரில் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து கொரோனா பரவல் அதிகரித்திருந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக கடும் ஊரடங்கு அமலில் இருந்தது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் ஷங்காய் நகரில் குறைந்து கொண்டே இருப்பதால் ஜூன் 1ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு செய்ய சீன அரசு முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து மக்கள் வீட்டிலிருந்து வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுப் போக்குவரத்து, பூங்காக்கள், வணிக வளாகங்கள், தொழிற்கூடங்கள் மற்றும் கடைகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
English Summary
Curfew relaxation in shanghai