ஈரான் ஹிஜாப் போராட்டம் : கைதான ஒருவருக்கு தூக்கு தண்டனை.! - Seithipunal
Seithipunal


கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதியன்று  ஈரானில் மாஷா ஆமினி என்ற 22 வயதுடைய இளம்பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்பதற்காக போலீசார் அவரை கைது செய்து, போலீஸ் காவலில் வைத்திருந்தபோது உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக ஈரான் நாட்டில் கடந்த சில மாதங்களாக ஹிஜாப்பை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில், ஏராளமான பெண்கள் சாலையில் இறங்கி ஹிஜாப் இல்லாமலும், அதை எரித்தும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்தை ஈரான் அரசு தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்து தாக்குதல்களை நடத்தியது. அந்த தாக்குதலில் 475 பேர் கொல்லப்பட்டதையடுத்து, 18 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில், போராட்டத்தின்போது பாதுகாப்பு படை வீரர் ஒருவரை கத்தியால் தாக்கியதாக குற்றம் சாட்டி மோசென் ஷெகாரி கைது செய்யப்பட்டார். அவருக்கு ஈரான் புரட்சிகர நீதிமன்றத்தில் மரண தண்டனை அளிக்கப்பட்டது. 

அதன்படி, அவரைத் தூக்கில் போட்டு தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். ஹிஜாப் போராட்டங்களில் கைதாகி அவருக்கு மரண தண்டனை விதித்து தூக்கில் போட்டது இதுவே முதல் முறை ஆகும். இந்த செயலுக்கு நார்வே நாட்டில் உள்ள ஆஸ்லோ நகரைச் சேர்ந்த ஈரான் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனர் மக்மூத் அமிரி மொகதாம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death penalty for eran hijap strike people


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->