சர்வதேச பல்லுயிர் பாதுகாப்பு மாநாடு: 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் நிதி திரட்ட முடிவு.! - Seithipunal
Seithipunal


அழிந்து வரும் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக உலக அளவில் பல்லுயிர் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கனடாவில் மான்ட்ரியா நகரில் 15வது சர்வதேச பல்லுயிர் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் 190-க்கும் மேற்பட்ட நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில், பல்லுயிர் பெருக்கத்திற்காக முக்கியமான 17 சதவீத நிலப்பரப்புகளும், 10 சதவீத கடல் பகுதிகளும் இதுவரை பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2030ஆம் ஆண்டிற்குள் 30 சதவீத நில மற்றும் நீர் பரப்புகளை பல்லுயிர் பெருக்கத்திற்காக பாதுகாப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தீர்மானம் மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பல்லுயிர் பாதுகாப்பு திட்டத்தை மேம்படுத்துவதற்காக 2030க்குள் 20000 கோடி அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டுவதற்கு அனைத்து நாடுகளும் உறுதி ஏற்றுள்ளனர்.

மேலும் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியை 2025ஆம் ஆண்டிற்குள் 2000 கோடியாகவும், 2030க்குள் 3000 கோடியாகவும் உயர்த்த மாநாட்டில் திட்டமிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Decision to raise USD 20000 crore for biodiversity conservation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->