டெல்லி தேர்தல் வாக்காளர் பட்டியலில் பல மக்கள் பெயர் இல்லை - மணீஷ் சிசோடியா.!
delhi election voter list peoples name not add maneesh sisodiya speach
இன்று டெல்லியில் 250 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக, அனைத்து அரசியல் கட்சிகளும் 1,349 வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளது.
இந்தத் தேர்தலை முன்னிட்டு டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா இன்று வாக்காளர்களிடம் தெரிவித்ததாவது, "டெல்லியில் உள்ள 1.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கும்போது, தூய்மையான டெல்லி, சுகாதார விவகாரங்கள், நிலக்கழிவுகள், ஊழல், பள்ளி, மருத்துவமனைகள் உள்ளிட்ட பல விசயங்களையும் நினைவில் வைத்துக்கொண்டு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.
இந்த தேர்தலில், மந்தகதியில் மதியம் இரண்டு மணிவரையில் 39 சதவீத வாக்கு பதிவு நடந்துள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், டெல்லி மாநகராட்சி தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பலரது பெயர் இல்லை.
தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாததற்காக மக்கள் அனைவரும் ஆத்திரத்தில் உள்ளனர். இதில் ஏதோ சதி திட்டம் நடந்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் சென்று சதி திட்டம் பற்றி புகார் அளிக்க போகிறேன்" என்று டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
English Summary
delhi election voter list peoples name not add maneesh sisodiya speach