6650 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் டெல் நிறுவனம்.! அதிர்ச்சியில் ஊழியர்கள்.!
dell company announce lay off 6650 employees
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளையே உலுக்கி வந்த கொரோனாத் தொற்றினால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ட்விட்டர் மற்றும் மெட்டா உள்ளிட்ட சில முக்கியமான நிறுவனங்கள் உலகம் முழுவதும் உள்ள தனது பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
இந்த பணியிடை நீக்கம் பொருளாதார நெருக்கடி, குறைந்த விற்பனை மற்றும் இலக்கை அடைவதில் தொய்வு உள்ளிட்ட காரணங்களினால் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் அனைவரும் ஒருவித பயத்திலேயே உள்ளனர்.
இந்த நிலையில், டெல் டெக்னாலஜிஸ் நிறுவனம் தனிநபர் கணினிகளுக்கான தேவை குறைந்து வருவதால், சுமார் 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பணிநீக்கம் உலக அளவில் உள்ள அதன் பணியாளர்களில் 5% ஆகும்.
இதுகுறித்து டெல் நிறுவனத்தின் இணை-தலைமை இயக்க அதிகாரி ஜெப் கிளார்க் தெரிவித்துள்ளதாவது, "பங்குச்சந்தையில் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் நிலைமையில் உள்ளதால் நிறுவனத்தின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியுடன் உள்ளது" என்று தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற பணிநீக்கம் கடந்த 2020-இல் கொரோனா தொற்றுநோய் பரவலின் போது அறிவிக்கப்பட்டது.
English Summary
dell company announce lay off 6650 employees