மொராக்கோ நிலநடுக்கம் - 3 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை.!
died counts increase in moracco earthquake
மொராக்கோ நிலநடுக்கம் - 3 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை.!
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த 8ம் தேதி நள்ளிரவு சுற்றுலா நகரமான மராகெச் அருகே அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு உண்டான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 19 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதனால், அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உறங்கி கொண்டிருந்த ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற முடியாமல், கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதில், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். மேலும், கட்டிட இடுபாடுகளில் இருந்து தொடர்ந்து உடல்கள் எடுக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது.
அந்த வகையில், நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரத்தை தாண்டியுள்ளதாக மொராக்கோ உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், 2500 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
died counts increase in moracco earthquake