மது போதையில் ஊழியரின் கையை கடித்த பயணி.!! நடுவானில் அட்டகாசம்.!!
Drunken Passenger bit staff in flight
அமெரிக்காவின் சியாட்டிலுக்கு ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் இருந்து புறப்பட்ட ஆல் நிப்பான் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று 159 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் பயணம் செய்த 55 வயது தக்க பயணி ஒருவர் திடீரென எழுந்து விமான பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
அவர் விமான பணியாளர்களை தாக்கியதோடு விமானியின் கையை கடித்து உள்ளார். இதனால் விமான பணியாளருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து பயணிகளின் பாதுகாப்பை கருதி அந்த விமானம் மீண்டும் டோக்கியோவுக்கு திரும்பியது.
ஜப்பான் நாட்டின் ஹெனேடா மனநிலையத்தில் தரையிறங்கியதும் போலீசாரிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார் இதனால் வானத்தில் பயணம் செய்த பயணிகளின் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை எடுத்து கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் நடந்த சம்பவம் எதுவும் தனக்கு நினைவில்லை என தெரிவித்துள்ளார். விமானத்தில் உள்ளே நடந்த சம்பவம் ஜாம்பி படத்தின் துவக்கம் போல இருந்ததாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அந்தப் பயணி குடிபோதையில் இருந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது
English Summary
Drunken Passenger bit staff in flight