ஒரே நாளில் இரண்டு இடத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவு.! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள ஆக்சு மாகாணம் ஆரல் என்ற நகரில் இருந்து தென்கிழக்கே சுமார் 106 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 5.49 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி உள்ளது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 

இதேபோல், கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள பீஷ்கேக் நகரிலிருந்து தென்கிழக்கே 726 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 5.19 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கம், 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த தகவலை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக தெரியவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

earth quake in china and kyrgyzstan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->