பிலிப்பைன்ஸில் 6.0 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்.!!
Earthquake of 6 magnitude hits Phillipines
பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 8 கிலோமீட்டர் (4.97 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது மிண்டானாவ் தீவில் உள்ள மலைப் பிரதேசமான தாவோ டி ஓரோவில் உள்ள மரகுசன் நகராட்சியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பிற்பகல் 2:00 மணியளவில் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு பற்றிய அறிக்கைகளை சரிபார்த்து வருவதாக மரகுசன் பேரிடர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்து என்ற தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி 6.1 ரிக்டர் அளவில் மத்திய பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Earthquake of 6 magnitude hits Phillipines