ஈரான் ஹிஜாப் போராட்டம் தீவிரம் - தலைவர் சிலைகள் சேதம்..!
eeran hijap strike leaders statue broke
ஈரான் நாட்டில் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று கூறி மாஷா அமினி என்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்து கடுமையாக தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற அவர் கடந்த 17-ந்தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து ஈரானில் ஹிஜாப் அணிவது குறித்து கடும் போராட்டம் ஆரம்பமானது. ஈரான் அரசுக்கு எதிராக பெண்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். மேலும், அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் திரண்டு போராடி வருகிறார்கள்.
அந்த போராட்டத்தில், பெண்கள் ஹிஜாப்பை எரித்தும், தலைமுடியை வெட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டங்களை ஒடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதனால் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.
இதில், பலியானவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. போராட்டக்காரர்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தாலும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், ஈரான் நாட்டில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுபெற்று வருகிறது. தினமும் சாலைகளில் பெண்கள், ஆண்கள் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், ஈரான் அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்த நிலையில் தலைவர்கள் சிலைகளுக்கு தீ வைக்கப்பட்டது.
அதில், ஈரான் தலைவரான ருஹோல்லா கொமேனியின் சிலைக்கு சிலர் தீ வைத்தனர். இதில் அந்த சிலை கொளுந்துவிட்டு எரிந்தது. ஈரான் தலைவரின் சிலை தீப்பற்றி எரியும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது.
இந்த சிலை எரிப்புக்கு பல மூத்த மத குருக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதேபோன்று சில இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஈரானில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருவதால் அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
English Summary
eeran hijap strike leaders statue broke