குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் எகிப்து அதிபர்.!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஜனவரி மாதம் 26 ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த வருடம் கொண்டாடப்பட உள்ள இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எகிப்து அரபுக் குடியரசின் அதிபர் 2023ம் ஆண்டு கொண்டாடப்படவுள்ள இந்திய குடியரசு தின விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்வது இதுவே முதல் முறை ஆகும்.

இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அல்-சிசிக்கு அனுப்பிய முறையான அழைப்பிதழை, கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி அன்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எகிப்து அதிபரிடம் அளித்தார்.

மேலும், இந்தியாவும் எகிப்தும் நாகரீக மற்றும் ஆழமான வேரூன்றிய மக்களிடையேயான உறவுகளின் அடிப்படையில் அன்பான மற்றும் நட்புறவை அனுபவிக்கின்றன" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

egypt president come to india for republic day function chief guest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->